Tuesday, March 2, 2010

MARCH 1





'We march to a better tomorrow ' என்பது தெளிவாய் தெரிகிறது .

இன்று காலை Coke பானத்தின் CEO திரு. கிருஷ்ணா குமார் என்னை சந்திக்க வந்து இருந்தார் . பேச்சின் நடுவே மிக இயல்பாக சொன்ன ஒரு சேதி ...

சட்டென எழுந்து நின்று அவர் திசை நோக்கி என்னை salute செயய்த் தூண்டியது .

மருத்துவர்கள் கூட வேலை நிறுத்த போராட்டம் புரியும் இந்த இந்திய திருநாட்டில் ... அவர் தன் மகன் சித்தார்த்தை மருத்துவத்திற்கு படிக்க வைத்த தோடு இல்லாமல் ..... தந்தை மகன்காற்றும் உதவியாய் ...

' மகனே என் உழைப்பில் நான் சம்பாதித்த பணத்தில் உன்னை படிக்க வைத்தது போக மீதி உன்பெயரில் போட்டுவிடுகிறேன் அது உன் தேவைகளை பூர்த்தி செய்து விடும். அதனால் நீ சமுதாயத்தில் கீழ்மட்டதில் உள்ள மக்களுக்கு உன் மருத்துவத்தை பயன்படுத்து . சிரஞ்சியை போட்டு மருந்தை உறிஞ்சாதே ' என கேட்டு கொண்டு அதன் படி சித்தார்த் நடக்க உதவி உள்ளார் .

மருத்துவராக பணிபுரிவது சேவை என்றால் .... அப்படி தன்மகன் பணிபுரிய மகத் துவமான தியாகம் செய்யும் அப்பாவிற்கு மனம் நிறைந்த அப்ளாஸ் உடன் ... வழங்கலாம் ஒரு 'டாக்ட்ரேட்' !

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

1 comment:

  1. மெல்லக்கொல்லும் விஷத்தை வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்த பாவம் கூட கிருஷ்ணகுமாரின் மனதை உறுத்தி இருக்கலாம். இந்த பாவத்துக்கு பரிகாரம் தேடும் முயற்சியில் தன் மகனை மருத்துவத்துறைக்கு சேவை செய்ய சொல்கிறார் அவர்.

    ஆனாலும், அவரின் இந்த மனது பாராட்டுக்குரியது. கருவாடு விற்ற காசு நாற்றம் எடுக்காது. இந்த பணத்தில் படித்தாலும் சித்தார்த்தின் சேவை சிறக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete