Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Tuesday, March 2, 2010

MARCH 1





'We march to a better tomorrow ' என்பது தெளிவாய் தெரிகிறது .

இன்று காலை Coke பானத்தின் CEO திரு. கிருஷ்ணா குமார் என்னை சந்திக்க வந்து இருந்தார் . பேச்சின் நடுவே மிக இயல்பாக சொன்ன ஒரு சேதி ...

சட்டென எழுந்து நின்று அவர் திசை நோக்கி என்னை salute செயய்த் தூண்டியது .

மருத்துவர்கள் கூட வேலை நிறுத்த போராட்டம் புரியும் இந்த இந்திய திருநாட்டில் ... அவர் தன் மகன் சித்தார்த்தை மருத்துவத்திற்கு படிக்க வைத்த தோடு இல்லாமல் ..... தந்தை மகன்காற்றும் உதவியாய் ...

' மகனே என் உழைப்பில் நான் சம்பாதித்த பணத்தில் உன்னை படிக்க வைத்தது போக மீதி உன்பெயரில் போட்டுவிடுகிறேன் அது உன் தேவைகளை பூர்த்தி செய்து விடும். அதனால் நீ சமுதாயத்தில் கீழ்மட்டதில் உள்ள மக்களுக்கு உன் மருத்துவத்தை பயன்படுத்து . சிரஞ்சியை போட்டு மருந்தை உறிஞ்சாதே ' என கேட்டு கொண்டு அதன் படி சித்தார்த் நடக்க உதவி உள்ளார் .

மருத்துவராக பணிபுரிவது சேவை என்றால் .... அப்படி தன்மகன் பணிபுரிய மகத் துவமான தியாகம் செய்யும் அப்பாவிற்கு மனம் நிறைந்த அப்ளாஸ் உடன் ... வழங்கலாம் ஒரு 'டாக்ட்ரேட்' !

அன்புடன்
உங்கள் ரா. பார்த்திபன்
www.parthepan.com

Saturday, February 27, 2010

ஹாய் அன்பான நண்பர்களே....:)




ஹாய் அன்பான நண்பர்களே....:)

பொதுவாக இந்த அறிய வகை மீன்கள் சிக்கவேண்டும் என விரும்பி
வலை விரிப்பார்கள்,போராடுவார்கள் . ஆனால்


இந்த அன்பு வலைக்குள் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று
அந்த மீன்களே ஆசைப்பட்டால் எப்படி இருக்கும்?
அதை விட அந்த வலைக்கு எடை கூடிய மகிழ்ச்சி
வேறென்ன சிக்க போகிறது ?

அப்படி ஒரு பேரின்ப பெருவலையை உங்கள் முன் விரிக்கிறேன் ...

ஜோடி கண்களையும் ,கோடி உள்ளங்களையும்

கவர்ந்துகொள்ள ...என்ன இருக்கிறது என வலைக்குள் தேடாதீர்கள்..


அதில் ....

நீங்களும் நானும் மட்டுமே .


பார்க்கலாம் யார் யாரை இயக்குகிறார்கள் என்று


ரா. பார்த்திபன்
www.parthepan.com